யாழில் 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா

யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினால் இன்று 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அத்துடன் இந்நிகழ்வின் போது போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநரால் பரிசில்கள்  மற்றும் சான்றிதழ்களும்  வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர்கள், கூட்டுறவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்