இந்திய இளைஞர்களிடம் பாடம் கற்கவேண்டுமாம்!  விமல் வீரவன்ஸ கூறுகிறார்

எம்முடைய இளைஞர் சமுதாயமும் இந்திய இளைஞர் சமுதாயத்திடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்தியாவின் இந்த திட்டத்துக்காக பில்லியன் கணக்கான நிதி செலவாகும் போது நாட்டில் ஏழைகள் இருக்கின்றார்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் இவ்வளவு பேர் இருக்கின்றார்கள்.

கல்வி இல்லாமல் இவ்வளவு பிள்ளைகைள் இருக்கின்றார்கள் என்று இந்த சந்தோசத்தை அழிக்க நினைக்கும் மோசமான இளைஞர்கள் இந்தியாவில் இல்லை.

இந்தியாவிலுள்ள இளைஞர்கள் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் தங்கள் தேசிய கொடியுடனும் தங்கள் தேசியத்துடனும் உணர்வுபூர்வமாக இணைந்து இருக்கின்றார்கள்.

எம்முடைய இளைஞர் சமுதாயமும் இந்திய இளைஞர் சமுதாயத்திடம் பாடம் கற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றேன்.

நிலவின் தென்துருவத்தில் முதலாவதாக விண்கலத்தை தரையிரக்கி சாதனை படைத்த இந்தியாவிற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம். – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.