யாழ். மாவட்டத்தில் வரட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு அரச அதிபர் சிவபால சுந்தரன் தகவல்

அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவபால சுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின்  வரட்சி நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போதைய நிலைமையின்படி 22 ஆயிரம் குடும்பங்கள் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதில், சுமார் 8,000 குடும்பங்களைசேர்ந்த  மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக நெடுந்தீவு, ஊர்காவற் துறை, சாவகச்சேரி, மருதங்கேனி, சங்கானை போன்ற பிரதேச செயல பிரிவுகளில் இந்த குடிநீர் பற்றாக்குறை அல்லது மிக வரட்சியான நிலைமை காணப்படுகின்றது.

இந்த பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தின் ஊடாக அந்த திணைக்களத்தினுடைய அனுசரணையுடன் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல தொடர்ச்சியாக மாவட்டத்தில் இருக்கக்கூடிய இந்த நிலைமை நீடிக்குமாக இருந்தால் சில வேலைகளில் இன்னும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதற்கு ஏற்றாற் போல விரைவில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை அழைத்து அனர்த்த முகாமைத்துவை தொடர்பான ஒரு விசேட கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

எனவே, தற்போதுள்ள அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்குப் பொதுமக்கள் முன்வர வேண்டும்.

அதேபோல விவசாயதுறையில் பாதிக்கப்படுவோர் சம்பந்தமாகவும் அதே போல் வறடச்சியின் மூலமாக அன்றாட தொழில் இழந்துள்ளோர் தொடர்பிலும் விவரங்களைச் சேகரித்து அவர்களுக்கு ஏதாவது  நிவாரணம் அரசு நிறுவனங்கள் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உதவிகளை வழங்குவதற்காக விரைவாக விசேட கூட்டத்தைக் கூட்டவுள்ளோம்.

தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலை காரணமாக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளிடமிருந்து தனிப்பட்ட ரீதியாக விண்ணப்பங்கள் எவையும் வரவில்லை. எனினும், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிணற்று நீர் வற்றிக்கொண்டு போகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக பிரதேச செயலகரீதியாக விவசாயிகளினுடைய பாதிப்பு சம்பந்தமான ஒரு கணக்கெடுப்பை செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.