சுப்ரிம் செட்டை விண்ணுக்கு அனுப்புவதற்கு செலவழித்த 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்தது – சஜித் அரசாங்கத்திடம் கேள்வி
இந்தியா சந்திராயன் 1,2,3 ஆகியவற்றை சந்திரனுக்கு செலுத்துவதற்காக 263 அமெரிக்க டொலர் மில்லியன் செலவழித்திருக்கிறது.
ஆனால் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 ஐ செலுத்துவதற்கு 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலழிக்கப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2008, 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் முறையே சந்திராயன் 1,2, மற்றும் 3 என பாரிய முயற்சியின் மூலமே இந்தியா சந்திரனுக்கு விண்கலத்தை செலுத்தி இருக்கிறது. இந்த 3 நடவடிக்கைகளுக்கும் இந்தியா 623 மில்லின் அமெரிக்க டொலர்களையே செலவழித்திருக்கிறது.
ஆனால் 2012இல் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 செயற்பட்டிருக்கிறது. அதற்காக 320 மில்லியன் அமெரிக்க டொலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்ததது என தெரியாது. அதனால் இது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, 320 மில்லியன் டொலர்களை செலவழித்து சந்திரனுக்கு சென்றார்களோ இல்லையோ நாட்டை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றார்.
இதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான சுசிச் பிரேமஜயந்த பதிலளிக்கையில், 2015 இல் இருந்து 2018 வரை நான் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சராக இருந்தேன். ஆனால் அந்த காலப்பகுதியில் சுப்ரிம் செட் தொடர்பில் எனக்கு அறிவுறுத்தப்படவில்லை. இலங்கையில் யாரும் சுப்ரிம் செட் அனுப்பியது தொடர்பில் எனக்கு தெரியாது என்றார்.
கருத்துக்களேதுமில்லை