ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம்! சந்தேக நபர் தலைமறைவு

பண்டாரவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

50 வயதுடைய களனி, கோணவலையைச் சேர்ந்த ஒருவர் குறித்த ஹோட்டலுக்கு வருகைதந்ததுடன் உயிரிழந்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் பின்னர் அந்த நபர் ஹோட்டலில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ள நிலையில், சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவரும் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோதே குறித்த பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், நஞ்சும் அருந்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரால் எழுதப்பட்ட கடிதமொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்