நாட்டை மீட்கப் போராடிய பண்டாரவன்னியனை இங்கை அரசாங்கம் நினைவுகூருதல் வேண்டும்! ரவிகரன் சுட்டிக்காட்டு

 

விஜயரத்தினம் சரவணன்

அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி இந்த நாட்டை மீட்கப்போராடிய தமிழ் மாவீரனே பண்டாரவன்னியனாவான்.

எனவே மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிநாளை இலங்கை அரசாங்கமும் நினைவுகூரவேண்டும் என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மாவீரன் பண்டாரவன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நினைவுகூரலில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் பீரங்கிகளோடு இருந்த வெள்ளையர்களின் கோட்டைக்குள் புகுந்து, வெள்ளையர்களை வாள்கொண்டு வென்ற வரலாற்று முக்கியம் வாந்த நாள் இதுவாகும்.

இவ்வாறு அந்நிய ஆதிக்கத்திடமிருந்து எம்மை மீட்க போராடிய ஒரு தமிழ் மாவீரனை, சாதனையாளனை தமிழர்களாகிய நாம் நினைவுகூருகின்றோம்.

இலங்கை அரசானது இவ்வாறானதொரு வீரத் தமிழனை மதிப்பளிக்கவேண்டுமென்றோ, அல்லது நினைவுநாள்களை மேற்கொள்ளவேண்டுமென்றோ சிந்தித்தது கிடையாது.

அந்நியர்களை விரட்டியடித்த ஒரு வீரனை நினைவுகூராமல், இலங்கை அரசாங்கம் பிரிவினையைக் காண்பிக்கின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.

எது எவ்வாறாயினும் நாம் தொடர்ந்தும் மாவீரன் பண்டாரவன்னியனை நினைவுகூருவோம் – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்