சாவகச்சேரி நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் போராட்டம்!

 

யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் வழக்கு விசாரணைகள் 1.30 மணித்தியாலங்கள் தாமதமாகவே ஆரம்பமாகின.

இதன்போது சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க தலைவர் கேசவன் சயந்தன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்