மன்னாரில் சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

 

மன்னார் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகள், அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதித்துறையை அவமதிக்கும் விதத்தில் அல்லது விமர்சிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இவ்வாறான அவதூறு ஏற்படுத்தும் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தால் அதனை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் எனவும் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.