யாழில் நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில் அவர்  ஆற்றிய உரையைக்  கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து, கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்திருந்தது.

அந்தவகையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டிருந்தன.

இதன்காரணமாக யாழில் நீதிமன்ற செயற்பாடுகள் பாதிப்படைந்தன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.