சரத் வீரசேகரவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி தனிநபர் அடையாள உண்ணாவிரத போராட்டம்!

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்த வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார

நீதித்துறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத்வீரசேகர உள்ளிட்ட எனையவர்களையும் கைது செய், இனக்கலவரத்திற்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வீட்டை முற்றுகையிட முனையும் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்து, உள்ளிட்ட கோஷங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிபடுத்தி போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்