பாலிநகரில் வர்த்தக நிலையம் தீக்கிரை!

 

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் சனிpக்கிழமை அதிகாலை கடையொன்று தீக்கிரையாகியுள்ளது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த துரைராசா வசீகரன் என்பவருடைய ‘வசி ஸ்டோஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர். எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை.

குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.