மட்டு. மாநகர சபையால் இந்து மயானம் துப்புரவு!
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படும் பொது மயானங்களைத் துப்புரவு செய்யும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி நகரின் மத்தியில் அமைந்துள்ள கள்ளியங்காடு இந்து மயானத்தை துப்புரவு செய்து அழகுபடுத்தும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டன.
தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவும் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சிரமதானப் பணிகளில் மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் த.டமராஜ் உள்ளிட்ட சுகாதார பகுதி உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சிரமதானப் பணிகளின் போது பொதுமக்கள் தமது இறுதி சடங்குகளை அசௌகரியங்கள் இன்றி முன்னெடுப்பதற்கு ஏதுவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள உள்ளக பாதைகளும் சீரமைக்கப்பட்டதுடன், இரவு வேளைகளில் அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எல்.ஈ.டி. மின் குமிழ்களும் இதன்போது பொருத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













கருத்துக்களேதுமில்லை