விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா

யாழ்  பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் ,இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகத்துறை சார்ந்தோர்,பல்கலைக்கழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகத்துறையில் தனது ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வினை உள்ளடக்கி பி. விக்னேஸ்வரன் இந்நூலினை உருவாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.