வான் ரயிலுடன் மோதி வாதுவையில் விபத்து!  ஒருவர் காயம்

வாதுவை, தல்பிட்டியவில் பாதுகாப்பற்ற கடவையில் வான் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

களுத்துறை வடக்கிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த வான் மோதி ரயிலின் இயந்திரத்தில் சிக்கியுள்ளது.

வானில் இருவர் பயணித்த நிலையில் சாரதியை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளதோடு, வானுக்கும் ரயிலுக்கும் இடையே பெண் ஒருவர் சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக்கொண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து, தீயணைப்புப் பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து குறித்த பெண் மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளானவர்கள் கொட்டிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் வானின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ரயிலின் இயந்திரம் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை வடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.