எவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது வருடாந்த மாநாட்டில் தமது கட்சியின் உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ந்தும் தெரிவித்து வரும் நிலையில் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட போது ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவுமே அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டனர் என கூறினார்.

மேலும் கடந்த 2020 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் டயானா கமகே, ராஜபக்ஷக்களுக்கு ஆதரவை வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்டார்.

ராஜபக்சக்களுடன் இணைந்து கொண்டதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள முடியாத ஒரு தவறைச் செய்துள்ளார் என்றும் ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டினார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஏழு தேசியப் பட்டியல் ஆசங்களை பெற்றுக்கொண்ட தமது கட்சியை பார்த்து ஐக்கிய தேசியக் கட்சி அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.