மட்டு. ஊடகவியலாளர் நினைவு தூபியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு!

மட்டக்களப்பில் புதன்கிழமை வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமலராஸ் அமலநாயகியால் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலளார்களின்  நினைவுத்தூபியில் அமலராஸ் அமலநாயகிக்கு எதிராக மர்ம நபர்களால்  சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த சுவரெட்டியில்  ‘  நமக்கான டொழரை(டொலரை)பெற பேரணியில் கலந்துகொள்ள வாருங்கள் ‘ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச் சுவரொட்டி குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஊடகவியலாளர்கள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக  இது உள்ளதாகவும் ,இவ்வாறாக செயற்பாடுகளை உரியவர்கள் கைவிடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்