அஸ்வெசும வேலைத்திட்டம் தெளிவூட்டல் செயலமர்வுகள்

 

நூருல் ஹூதா உமர்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் எதிர்கால திட்டங்கள், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் திணைக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை, நிறைவேற்றுக் குழு தலைவர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு கடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி பாக்கியராஜா, குறுநிதிப் பணிப்பாளர் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி சங்க முகாமைத்துவப் பணிப்பாளர்கள், சமுர்த்தி வலய உதவியாளர்கள், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், சமுர்த்தி வங்கி, வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை, நிறைவேற்றுக் குழு தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்