முன்னணி சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவுக்கு நீதிமன்று அழைப்பாணை!

முன்னணி சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவுக்கு கோட்டை நீதிவான் திலின கமகே அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

துமிந்த நாகமுவ, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் முகநூல் மற்றும் யூடியூப்பில் அறிக்கை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை  அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு துமிந்த நாகமுவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்