இந்தியா பெங்களூர் மேற்கு லயன்ஸ் கழகம் வடக்கு மாகாண லயன்ஸ்களுடன் சந்திப்பு!

இந்தியாவின் 307 ஏ மாவட்டத்தைச் சேர்ந்த பெங்களூர் மேற்கு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் வடபகுதிக்கு வருகைதந்து மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரையும் வடக்கு லயன்ஸ்களையும் இன்று (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலி திண்ணை ஹோட்டலில் சந்தித்தனர்.

இரு லயன்களுக்கும் இடையில் நட்புறவு பாராட்டப்பட்டதுடன், வடபகுதியைச் சேர்ந்த 5 லயன்ஸ் கழகங்களின் தலைவர்களுக்கு இங்கு சேவைத்திட்டங்களை மேற்கொள்ளவென 5 ஆயிரம் இந்திய ரூபாவரையில் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், இங்கு வருகைதந்த வடக்கு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்கள் சால்வை போர்த்திக் கௌரவித்து நினைவு சின்னங்களும் வழங்கிவைத்தனர்.

இந்திய பெங்களூர் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் தியாகராஜா முத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம். பீற்றர், இந்தியாவின் மாவட்டம் 307 ஏ இன் முன்னாள் ஆளுநர் ரி.கே.சுவாமியப்பன் மற்றும் பெங்களூர் மேற்கு, இலங்கையின் வடக்கு லயன்ஸ்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.