சீனாவா?, இந்தியாவா? என்று கேட்டால் இந்தியாவுக்கே முன்னுரிமை கொடுப்பேன்! அமைச்சர் டக்ளஸ் பகிரங்கம்

சீனாவா இந்தியாவா எனக்கேட்டால் இந்தியாவிற்கே முன்னுரிமை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனக் கப்பல்  இலங்கை வருகை தரவுள்ளமை தொடர்பில்  இந்த விடயம் ஒரு பேசு பொருளாகவுள்ளது இந்த நிலையில் நீங்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விஐயம் மேற்கொண்டு வந்துள்ளமையால் உங்களின் நிலைப்பாடு என்ன என  ஊடகவியலாளர்களால் கேட்ட போது –

சீனா, இந்தியா இருநாடுகளும் தேவைதான். ஆனால் எதற்கு முக்கியத்துவம் என்றால் இந்தியாவிற்கே முக்கியத்துவம் தருவேன் என்றார். இதேவேளை –

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை தரவுள்ள நிலையில் அவரிடம் தமிழ் கட்சிகள் கடற்தொழில்  பிரச்சினைகள் குறிப்பாக எல்லை தாண்டும் மீனவர்களால் போதைவஸ்து கடத்தல் இடம் பெறுகின்றமை தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என கடற்தொழிலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளமை தொடர்பில் கேட்டபோது –

போதைவஸ்து கடத்தப்படுகின்றமை தொடர்பில் அதனை கூறியவரிடம்தான் கடத்தல் தொடர்பில் கேட்கவேண்டும்.  அவர்கள் ஊகங்களுக்கு பதில் கூற என்னால் முடியாது அவர்களிடம்தான் இதனை கேட்க வேண்டும். மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகின்றபோது அவருடன் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவேன். – என்றார்.

இதேவேளை கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் சீமெந்து தொழிச்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோது –

சிமெந்து தொழிற்சாலை அமைவதாயின் அதற்கான விஞ்ஞான ரீதியாலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு அமைப்பதற்கு ஏற்ற இடம் அடையாளப்படுத்தப்பட்டால் மாத்திரமே அங்கு சிமெந்து தொழிற்சாலை அமைக்கப்படும். ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தப்படுகின்ற விடயம் அல்ல. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்