திமிங்கல வாந்தியின் 3 துண்டுகள் வைத்திருந்த முன்னாள் சிப்பாய் உட்பட மூவர் கைதாகினர்!

646 கிராம் நிறைகொண்ட  அம்பர் எனப்படும் பாதுகாக்கப்பட்ட கடல் திமிங்கல வாந்தியின் 3 துண்டுகளை வைத்திருந்த ஓய்வுபெற்ற, அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நெதகமுவ கெஹல்பத்தர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் என கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நெதகமுவையைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 48 வயதுடைய ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரும், கலகெடிஹேனையைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக பெறுமதியான அம்பர்  விற்பனை செய்யப்படடவுள்ளதாக    மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய கம்பஹா பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி கோசல லியனாராச்சி உள்ளிட்ட குழுவினரே சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்