இலங்கைக்கு எந்நிலையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜப்பான் பிரதிநிதிகள் குழு உறுதி

இலங்கை விரைவான பொருளாதார ஸ்திரப்படுத்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கு மத்தியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஜப்பான் நாட்டின் பிரதிநிதிகள் குழுவினரிடம் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தகஷிதி யுசுகே தலைமையிலான மேலவை அமைச்சர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு  நிதியமைச்சில் இடம்பெற்றது.

இலங்கை விரைவான பொருளாதார ஸ்திரப்படுத்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கு மத்தியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளாது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து இலங்கை மீட்சிப்பெறுவதற்கு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஜப்பான் ஆரம்பத்தில் இருந்து இலங்கைக்கு சாதகமாக செயற்படுவது வரவேற்கத்தக்கது என நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டும் இலங்கை வலுவானதொரு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு எந்நிலையிலும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.  என தகஷிதி யுசுகே தலைமையிலான மேலவை அமைச்சர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் உறுதியளித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.