ஜீவனுக்கு கிடைத்த புதிய பதவி

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான உறவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்த பேரவை அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முன்னாள் தலைவர் சிவராமன் மற்றும் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே தலைமைப் பதவியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக் கொண்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக தொடர்புகளை விரிவாக்குவது, இளம் தொழில் அதிபர்களை உருவாக்குதல் மற்றும் மலையக தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.