மின்சாரவேலியில் தும்பிக்கை சிக்கி கொம்பன் யானை பரிதாபச் சாவு! ஆனமடுவ பகுதியில் சம்பவம்

புத்தளம் – ஆனமடுவ செம்புவௌ பகுதியில் கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் யானை உயிரிழந்திருப்பதை கண்ட அப்பிரதேச மக்கள் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று உயிரிழந்த கொம்பன் யானையை பார்வையிட்டுள்ளனர்.

தும்பிக்கை மின்சார வேலியில் சிக்குண்டதாலேயே கொம்பன் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த கொம்பன் யானை 9 அடி உயரம்; அதன் தந்தம் 2 அரை அடி நீளம் எனவும் 40 வயது மதிக்கத்தக்கது எனவும் குறித்த திணைக்களத்தினர் மேலும் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த கொம்பன் யானைக்கு மிருக வைத்தியர் இசுருவினால் ஞாயிற்றுக்கிழமை உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

இந்த யானை மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்