யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு

யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம்  இன்று (03) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இன்று அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கட்டிடத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல் ரத்நாயக்க திறந்து வைத்தார்.
கட்டிடத்திற்கான பெயர் பலகை திரையினை  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.