மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறும் – சுகாஸ்

ழிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்பு இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்த்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கம் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எங்களின் எதிர்காலம் இந்த நிலங்கள். எஞ்சியிருக்கின்ற நிலங்களையும் பெரும்பான்மையினத்தவர்கள் ஆக்கிரப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு காலதாமதம் செய்யாது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் முள்ளிவாய்க்காய் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் இடம்பெறும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.