ஹம்பாந்தோட்டையில் Sinopec நிலையம்

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் ‘Sinopec’ ‘ நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாகவும், அதற்கான திட்ட முன்மொழிவு அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை எரிபொருள் விநியோக நிறுவனம் மற்றும் சினோபெக் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளின் முன்னேற்றம், எரிபொருள் நிரப்பு நிலைய விநியோக முகவர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் முன்னேற்றம், Sinopec’ வர்த்தக செயற்பாடுகள் மற்றும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள சந்தை நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.