வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

உணவு வழங்குனர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு உணவு வழங்குவதற்கான டெண்டர்கள் அதிக விலைக்கு வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் உணவு வழங்குனர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை வழங்க முடியாததால் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்