அவிசாவளையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்!

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்க கொழும்பு மாவட்ட கிளையினால் அவிசாவளை,வகரத்தனசார மகா வித்யாலயத்தில் இலவச மருத்துவ முகமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

சுமார்  10 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், தாதிமார்கள் பங்கேற்ற  இந்நிகழ்வில் மூக்கு கண்ணாடி வழங்குதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ  ஆலோசனைகள் என்பன பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இச்சங்கத்தினரால் கடந்த வருடமும் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இவ்வாறான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதோடு, இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் இவ்வாறான சமூக செயற்பாடுகள் மற்றும்  மருத்துவ முகாம்கள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்