யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர் கைது!

யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில் நேற்று (03) இரவு சுமார் 765 கிராம் கஞ்சாவுடன் மண்டைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்