யாழ்.சில்லாலையில் கொடூர விபத்து: இளைஞர் உயிரிழப்பு

யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அண்மையில், நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிளானது வேக கட்டுப்பாட்டை இழந்து தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்தவர் சில்லாலை பகுதியைச்  சேர்ந்த  20 வயதான பத்மநாதன் வசீகரன்  எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக  யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்