புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம்!

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மாணவி ராம்குமார் கவிப்பிரியா மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

சித்தியடைந்த மாணவி கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி செல்வி ராம்குமார் கவிப்பிரியா தமிழ், விவசாய விஞ்ஞானம், புவியியல் ஆகிய பாடங்களில் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

அதேவேளை தேசிய ரீதியில் 194 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.