கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சியை சேர்ந்த சண்முகம் மாதுளன் என்ற மாணவன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

கணிதப் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த மாணவன் முதலிடத்தைப் பெற்று பாடசாலை சமூகத்துக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏற்கனவே 2020 இல் இவரது சகோதரி சண்முகம் வைஸ்ணவி கணித பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்