கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வராலயத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பிள்ளையானின் விஜயம்!

காலம் காலமாக சைவ விழுமியங்களாக மட்டக்களப்பில் உள்ள பிரபல ஆலயங்களில் ஆண்கள் மேல் அங்கியை கழட்டி விட்டு ஆலயத்துக்குள் செல்வது பாரம்பரியமாக நடந்து வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் பந்தலகுனவர்த்தன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி. சந்திரகாந்தன் உட்பட அவருடைய சகாக்கள் கொக்கட்டி சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்கு மேலங்கியை கழட்டவில்லை என்பதுடன் காலில் அணிந்திருக்கும் காலுறையை கழட்டிவிட்டு காலை கழுவிவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையவேண்டும் என்பது சைவசமயத்தின் விழுமியம்.

ஆனால் அவை எதனையும் செய்யாமல் ஆலய தரிசனம் செய்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தற்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சருடன் ஆலய விழுமியங்களை அவமதித்து அதை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் கட்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.