உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கான மின் வலிப்பு சிகிச்சை இயந்திரம் அன்பளிப்பு! தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்

தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளருக்கான மின் வலிப்பு சிகிச்சை இயந்திரம் (ஈ.சி.ரி.) பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்ட புலம் பெயர் தமிழர் அமைப்பான இலங்கை – இந்தியா வர்த்தக சங்கத்தினரால் ஒரு கோடி ரூபா பெறுமதியில் சாலைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.

வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமையில்
உளநல சிகிச்சை நிபுணர்களான வைத்தியகலாநிதிகள் ரி.உமாகரன், பேராசிரியர் எஸ்.சிவயோகன் ஆகிய இரு வைத்திய நிபுணர்களின் ஒருங்கமைப்புடன் சமூக செயற்ப்பாட்டு பொறுப்பு உத்தியோத்தர் சுதர்சன் மற்றும் உளநல விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் ஜனார்த்தனன் ஆகியோரின் வழிநடத்துதலில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வுக்கு இலங்கை இந்தியா வர்த்தக சங்கத்தின் தலைவர் இராசையா சிறிதரன், உப தலைவர், செயளாளர் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

வைத்திய சாலையின் வைத்தியர்கள், வைத்திய சாலையின் தாதிய பரிபாலகிகள் மற்றும் உளநல பிரிவின் தாதியர்கள் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

பின்னர் வைபவ ரீதியாக மின் வலிப்பு சிகிச்சை இயந்திரம் உளநல பொறுப்பு வைத்திய நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.