எந்தத் தேர்தலையும் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லையாம்! அமைச்சரவை பேச்சாளர் பந்துல தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமல்ல எந்தவொரு தேர்தலையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அடுத்த வருடம் உரிய நேரத்தில் அனைத்து தேர்தல்களும் இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ‘பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளமை’ தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எந்தவொரு தேர்தலையும் ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்குக் கிடையாது. அவ்வாறான முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதில் எவ்வித சந்தேகங்களையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. அடுத்த வருடம் அந்தந்த தேர்தல்கள் அந்தந்த நேரத்தில் நடத்தப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்