மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கவனவீர்ப்புப் போராட்டம்! பூநகரியில் நடந்தது

கிளிநொச்சி பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொது அமைப்புகளால் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் பூநகரி சங்குப்பிட்டி வீதியின் பழைய பிரதேச செயலக வளாகம் முன்றிலில் இருந்து குறித்த பேரணி ஆரம்பமாகி புதிய பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

அதாவது பூநகரி பிரதேசத்தின் மையப் பகுதியான வாடியடி பகுதியில் உணவகத்துடன் கூடிய மதுபான சாலை ஒன்று பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஏற்கனவே இயங்கி வருகின்றது.

இந்த நிலையில் அதனை மதுபான விற்பனை நிலையமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிதேச செயலகத்தைச் சென்றடைந்த பேரணியின் இறுதியில் பிரதேச செயலர் மற்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தில் பூநகரி பிரதேசத்தை சேர்ந்த பொது அமைப்புகள், பெண்கள் வலை அமைப்பு, பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்