கலைப்பிரிவில் முதலிடம் பெற்று கண்டி மாணவன் சாதனை!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கெலிஓயா ஸ்ரீ பஞ்சரதன மத்திய மகா வித்தியாலயத்தின் பார்வையற்ற மாணவன் திவங்க ரணபாகு பிரேமலால் அப்போசா உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் கண்டி மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் முழு இலங்கையிலும் 75 ஆவது இடத்தைப் பெற்றுள்ள திவங்க, வாய்மொழி முறை மூலம் உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளார்.

இவர் 2018 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் முழுமையான பார்வைக் குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளதுடன், மற்றும் அவரது தாயார், இசை டிப்ளோமா பெற்றவராவார்.

இவர் புத்தகங்களைப் படித்து அவரை தேர்வுக்குத் தயார்படுத்தியுள்ளதுடன், இந்த சாதனை குறித்து திவாங்கவிடம் கேட்டபோது, இந்த சாதனை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், கண்டி மாவட்ட வரலாற்றில் பார்வையற்ற மாணவன் ஒருவன் அனைத்து பாடத்திலும் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்றும் கூறியுள்ளார்.

வழக்கமான பரீட்சைகளை நெருங்கிக்கொண்டிருந்தபோது தான் பார்வையை இழந்ததாகவும், தனக்கு கண்பார்வை குறைவதற்கு எந்த காரணமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் பார்வையை மீட்க சிகிச்சை பெற்று வருவதாகவும் திவாங்கா தெரிவித்துள்ளார்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்