லசந்தவை விரைவில் கொலை செய்க  என கோட்டா எம்மிடம் தெரிவித்தார்!  ஆசாத் மௌலானா கூறுகிறார்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை நாய் என தெரிவித்து அவரை கொலை செய்யவேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார் என  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா சனல் 4 இற்குத் தெரிவித்துள்ளார்.

மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் லசந்த விக்கிரமதுங்க செய்திகளை வெளியிட்டமை கோட்டாபய ராஜபக்ஷவை கடும் சீற்றத்துக்குள்ளாக்கியது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

பிள்ளையானையும் என்னையும் அவசர சந்திப்பிற்கு அழைத்த கோட்டாபய ராஜபக்ஷ, லசந்தவிக்கிரமதுங்க கொலை செய்யப்பவேண்டும் எனத் தெரிவித்தார் என சனல் 4 இற்கு ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

நாங்கள் கோட்டபாயவை அவரது அறையில் சந்தித்தோம் அவரது மேசையில் சண்டே லீடர் காணப்பட்டது, என குறிப்பிட்டுள்ள  ஆசாத் மௌலானா, கோட்டாபய ராஜபக்ஷ லசந்த விக்கிரமதுங்கவை பல்லா  நாய் என குறிப்பிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நாய்  எப்போதும் என்னுடன் மோதுகின்றது. இந்த நாயை  கொலை செய்யவேண்டும். உங்களால் முடிந்தளவு வேகமாக அதனை செய்யுங்கள் என கோட்டாபய தெரிவித்தார் எனவும் மௌலானா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.