வரலாற்றில் முதல் தடவையாக வைத்தியத் துறைக்கு தெரிவான ஜனுசிகாவுக்கு பெஸ்ட் ஒப்யங் கௌரவம்! நிந்தவூருக்குப் பெருமை சேர்ப்பு

 

நூருல் ஹூதா உமர்

நிந்தவூர் கமுஃகமுஃஅல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூர், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ.புஹாது, ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிந்தவூரின் வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற திறமையை தனதாக்கி கொண்டுள்ள ஜனுஷிகாவை பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ரீ. கலையரசன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசில் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவிக்கையில் வைத்தியத்துறைக்கு தெரிவான மாணவி ஜனுஷிகா, தான் சிறு வயது முதல் ஒரு சிறுபிள்ளை வைத்திய நிபுணராக வரவேண்டும் என்பது தனது இலட்சியம் என்றும், அதனை எதிர்காலம் நிச்சயம் கட்டியம் கூறி நிற்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தான் ஒரு வைத்திய நிபுணராக வெளிவந்ததும் ஏழை எளிய மக்களுக்கு நிச்சயம் இலவசமாகவே தன்னுடைய சிகிச்சை அளிப்புக்கள் இடம்பெறும் எனவும் உறுதியளித்தார்.

இந்த மாணவி கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அதி விசேடசித்தி 09 ஏ பெற்றமைக்காக அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பால் பரிசில் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.