கல்வியங்காட்டு பிரதேசத்தைப் பாதுகாக்குக நல்லூர் பிரதேசசபை செயலரிடம் கோரிக்கை! சமூக அமைப்பு பிரதிநிதிகள் விடுத்தனர்

 

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்திக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் தொடர்ச்சியாக அசுத்த குப்பைகளை இனந்தெரியாத நபர்கள் கொட்டுவதால் குறித்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என சமூக அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அசுத்த கழிவுகள் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டுமெனவும், சூழலை பாதுகாத்து அழகாக வைத்திருக்க நல்லூர் பிரதேசசபை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்