கணவன் தாக்கி மனைவி உயிரிழப்பு

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறின்போது கடுமையாக தாக்கப்பட்ட 24 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என வெலம்படை பொலிஸார் தெரிவித்தனர்.

உடுநுவர வெலம்பொட லொகுஅங்க பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அமலி லக்மினி சேனாநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவி நீண்ட நேரமாக கையடக்கத் தொலைபேசியில் பேசியதை அறிந்த கணவன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சமையல் அறையில் இருந்த தடி ஒன்றால் மனைவியை தாக்கியுள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(05)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.