இலங்கைக்கு வந்திறங்கிய ‘லீமர்ஸ்’ விலங்குகளும் ‘ஈமு’ பறவைகளும்!
4 மாத வயதுடைய ‘ஈமு’ பறவைகள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட பறக்காத பறவையினங்கள் ஆகும்.
ரிங் டெயில் லீமர்ஸ் என்பது மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட அழிந்துவரும் ஒரு விலங்கினமாகும்.
2 வயதுடைய இரு ஆண் ரிங் டெயில் லீமர்ஸ்களும் 11 வயதுடைய இரண்டு பெண் ரிங் டெயில் லீமர்ஸ்களும் இவ்வாறு இலங்கைக்கு செக் குடியரசால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விலங்குகள் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து புதன்கிழமை இரவு 9.10 மணியளவில் இலங்கையை வந்தடைந்தன.
இந்த விலங்குகள் ஒரு மாதத்துக்கு பின்னர் பின்னவல, வகொல்ல மிருகக்காட்சிசாலையில் வைத்து பராமரிக்கப்படும்.
பின்னவல, வாகொல்ல மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் மலித் லியனகே, தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மேனகா பத்திரகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்று இந்த விலங்குகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை