ஹரின், மனுச ஆகியோரிடம் வாக்குமூலம் பெற வேண்டும்!  டிலான் பெரேரா வலியுறுத்து

செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரிடமும் வாக்குமூலங்களைப் பெறவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குல் குறித்து செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘செனல் 4 வெளியிட்டு காணொளியில் உள்ள அதிகமான விடயங்களை தற்போது ஆளும் தரப்பில் உள்ள இரண்டு அமைச்சர்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்கள்.

ஹரின் பெர்னான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் இந்த விடயங்களை முன்வைத்திருந்தார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இவ்வாறான ஆயத்தம் நடக்கின்றது என்பது குறித்து சில வருடங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இதற்கு தொடர்புடையவர் என கூறப்படும் பிள்ளையானும் தற்போது ஆளும் கட்சியிலேயே இருக்கின்றார்.

இவர்கள் நால்வரிடமும் இந்த தாக்குதல் தொடர்பான வாக்குமூலங்களை பெற்று நாட்டிற்கு அறிவித்தால் சரி’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(05)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்