இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்ட மாநாடு! வவுனியா பல்கலையில் நடந்தது

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடும் பரிசளிப்பு விழாவின் இறுதி நிகழ்வும் வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் இணைந்து எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கோடு உருவாக்கியுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் சாள்ஸ் கலந்து கொண்டிருந்ததோடு பல்வேறு துறைகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்