கிளிநொச்சியில் உள்ள தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து!

கிளிநொச்சி பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஏற்பட்ட திடீர் தீயால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது.

மேலும் இதன் காரணமாக தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை மரங்களும், அருகிலுள்ள காணிகளில் உள்ள தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், கிராம மக்கள் ஆகியோரின் துணையுடன் தற்காலிகமாக குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும், கிராம குடியிருப்புகளுக்குள் தீ பரவாத வகையில் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், குறித்த தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்