கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருள்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு குறித்த உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது மருதங்கேணி பொலிஸார் நான்கு கொள்கலன்களில் கோடா 600 லீற்றருக்கு மேற்பட்ட கசிப்பு வடிப்பதற்கு தேவையான கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் பொருள்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக மருதகக்கேணி பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.