இந்தியாவிலிருந்து இலங்கை கடத்த மறைத்து வைக்கப்பட்ட 6 கிலோ ஐஸ் போதையுடன் பெண் உள்ளிட்ட நால்வர் கைது!

இலங்கைக்குக் கடத்துவதற்காக இந்தியாவின் வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து  வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள்களுடன் பெண்  ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்த இந்திய மதிப்பில் 6 கோடி ரூபா பெறுமதியான 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் சில இடங்களிலிருந்து அண்மையகாலமாக போதைப்பொருள்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.

கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை  தடுக்க  இந்திய மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட பொலிஸ், சுங்கத்துறை அதிகாரிகள்  தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்தியாவிலுள்ள வேதாளை எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் சேதுராஜன் என்பவர் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது.

பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிலிருந்து 6 கிலோ நிறையுடைய ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த வீட்டின் உரிமையாளரும் உரிமையாளரின் உறவினர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய தொடர் விசாரணையில் ஐஸ் போதைப்பொருளை  இவர்களுக்குச் சொந்தமான படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல முட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த விசாரணையின் போது மேலும் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட  ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி இந்திய மதிப்பில் 6 கோடி ரூபா ஆகும்.

இதேவேளை, ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில்  நான்கு பேர்  கைது செய்யப்பட்டு அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக  இருநாட்டு பாதுகாப்பையும் மீறி பல கோடி ரூபா மதிப்பிலான போதை பொருள்கள் இந்நாட்டு படகுகளில் தொடர்ந்து கடத்தப்பட்டு வரும் சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.