சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் சிறுவர் தடகள போட்டியில் அபார சாதனை

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்ட மட்டத்திலான சிறுவர் விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது கமுஃகமுஃ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் சார்பாக கலந்து கொண்ட தரம் 3 , தரம் 4 , தரம் 5 ஆண், பெண், கலப்பு அணிகள் மூன்றும் முதலிடம் பெற்று அபார வெற்றியீட்டியுள்ளனர்.

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் கல்முனை வலயக் கல்வி அலுவலக சிறுவர் விளையாட்டு இணைப்பாளர் எம்.எம்.ஏ. ஹபீல் தலைமையில் சனிக்கிpழட இடம்பெற்ற போட்டிகளில் இந்த சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த பாடசாலை மேற்படி போட்டியில் தேசிய மட்டம் வரை சென்று வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்காக மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ. ஆபாக் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்