தையிட்டி காணி அளவீட்டு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து குறித்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட இருந்தது. இந்நிலையில் காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அறிவித்தலுக்கு அமைய அளவீட்டுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.